கபடி விளையாடி இளைஞர்களை பந்தாடிய நடிகை ரோஜா! வைரலாகும் வீடியோ !!

கபடி விளையாடி இளைஞர்களை பந்தாடிய நடிகை ரோஜா! வைரலாகும் வீடியோ !!

கபடி விளையாடி இளைஞர்களை பந்தாடிய நடிகை ரோஜா! வைரலாகும் வீடியோ !!
X

நடிகையும் ஆந்திர மாநில எம்எல்ஏவுமான ரோஜா கபடி விளையாடி அனைவரையும் வியப்படையச் செய்தார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரோஜா. பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த அவர் பின்னர் பிரபல திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்துக்கொண்டு ஆந்திராவில் குடியேறினார். அங்கு அடுத்த இன்னிங்ஸை தொடங்கிய ரோஜா அரசியலில் புகுந்தார்.

பல்வேறு கட்சிகளுக்கு அவர் தாவினாலும் தேர்தலில் வெற்றிபெற்று வந்தார். அந்த வகையில் தற்போது ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏவாக ரோஜா உள்ளார். இந்த நிலையில், தமது நகரி பகுதியில், நடந்த ஆண்கள் கபடி போட்டியை தொடங்கி வைக்க ரோஜா சென்றிருந்தார். அப்போது இளைஞர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து எம்எல்ஏ ரோஜா போட்டியை தொடங்கிவைத்தார். அப்போது உற்சாகமடைந்த ரோஜா யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென களத்தில் இறங்கி விளையாட ஆரம்பித்தார் ரோஜா. அங்கு விளையாடிக் கொண்டிருந்த கபடி வீரர்களுடன் ரோஜா கபடி விளையாடினார்.

சேலையை இடுப்பில் எடுத்து சொருவிய ரோஜா மண்ணை தொட்டு வணங்கி சென்று எதிரணியினரை துவசம் செய்தார். இதனால் இளைஞர்களும் நகரி சட்டமன்ற தொகுதி பொது மக்களும் மிகவும் உற்சாகம் அடைந்தனர். பின்னர் வீரர்கள் அனைவரும் எம்எல்ஏ ரோஜாவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


newstm.in


Tags:
Next Story
Share it