Theme Check

ஆடை குறித்த விமர்சனத்திற்கு நடிகை சமந்தா தக்க பதிலடி!!

ஆடை குறித்த விமர்சனத்திற்கு நடிகை சமந்தா தக்க பதிலடி!!

ஆடை குறித்த விமர்சனத்திற்கு நடிகை சமந்தா தக்க பதிலடி!!
X

தமிழ், தெலுங்கில் என முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகை சமந்தா, அண்மையில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் பச்சை நிற உடை ஒன்றை அணிந்திருந்தார். அந்த உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைத் தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.

நெட்டிசன்கள் பலர் அவர் அணிந்திருந்த ஆடை குறித்து விமர்சனங்களை எழுப்பினர். இதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவரது சமூகவலைத்தள பதிவில், "பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை மட்டமாக எடைபோடுவதை முதலில் அனைவரும் நிறுத்துங்கள் என்று காட்டமாக கூறியுள்ளார்.

samantha

இனம், படிப்பு, சமூகம், நிறம் என அவர்களை அடையாளப்படுத்தும் பெரிய பட்டியலே அங்கு உள்ளது. நாம் 2022இல் இருக்கிறோம். இப்போதும் பெண்களின் உடையை வைத்து அவர்களை அடையாளப்படுத்துகிறோம், அதை நிறுத்துங்கள் என கூறியுள்ளார்.

பெண்களின் உடையை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரின் இந்த சமூக வலைத்தளப் பதிவு இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. நடிகர்கள் பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it