Theme Check

திருமண வீடியோவை ரூ.80 கோடிக்கு விற்ற நடிகை!?

திருமண வீடியோவை ரூ.80 கோடிக்கு விற்ற நடிகை!?

திருமண வீடியோவை ரூ.80 கோடிக்கு விற்ற நடிகை!?
X

பாலிவுட் பிரபலங்களான நடிகர் விக்கி கௌஷலும், நடிகை கத்ரீனா கைஃபும் தங்களின் திருமண வீடியோ உரிமையை அமேசான் பிரைமுக்கு ரூ. 80 கோடிக்கு விற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப் திருமணம் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் சொகுசு ரிசார்ட்சில் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது. திருமணத்திற்கு 120 பேரை மட்டுமே அழைத்திருக்கிறார்கள்.

விருந்தினர் யாரும் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை. திருமணம் நடக்கவிருக்கும் ஹோட்டலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

vicktrina

திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் புகைப்படம் எடுக்கவோ, அதை வெளியிடவோ அனுமதி இல்லை. இந்நிலையில் இருவரும் தங்களின் திருமண வீடியோ உரிமையை அமேசான் பிரைம் வீடியோவிடம் ரூ. 80 கோடிக்கு விற்றுவிட்டார்கள் என தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் கணவன், மனைவியான பிறகு ஜோடியாக இரண்டு பெரிய பிராண்டுகளின் விளம்பரத்தில் நடிக்க உள்ளனர். இந்நிலையில் ரசிகர்களோ நான் என் திருமண வீடியோவை ஹாட்ஸ்டாரிடம் ரூ. 120 கோடிக்கு விற்றுவிட்டேன், நெட்ஃப்ளிக்ஸிடம் ரூ. 100 கோடிக்கு விற்பனை செய்திருக்கிறேன் என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

newstm.in

Next Story
Share it