Theme Check

நடிகை அளித்த பரபரப்பு வாக்குமூலம்.. ஹரிநாடார் மீண்டும் கைது !

நடிகை அளித்த பரபரப்பு வாக்குமூலம்.. ஹரிநாடார் மீண்டும் கைது !

நடிகை அளித்த பரபரப்பு வாக்குமூலம்.. ஹரிநாடார் மீண்டும் கைது !
X

நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற வழக்கில் பனங்காட்டுப்படை கட்சியின் ஹரிநாடார் கைது செய்யப்பட்டார்.

நடிகை விஜயலட்சுமி கடந்த 2020-ம் ஆண்டு வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். அப்போது திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் மற்றும் சதா ஆகியோர் தன்னை மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறியிருந்தார்.

Vijayalakshmi

அவரது வாக்குமூலம் அடிப்படையில் திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி செய்த புகாரில் ஹரி நாடார் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில் சிறைவாசியாக இருந்து வரும் ஹரிநாடாரை, திருவான்மியூர் போலீசார் கைது செய்துள்ளனர். விஜயலட்சுமி தற்கொலை வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிநாடாரை கைதுசெய்ய அனுமதிக்கக்கோரி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு, திருவான்மியூர் ஆய்வாளர் கடிதம் எழுதியிருந்தநிலையி, தற்போது அவரை கைதுசெய்துள்ளனர்.

Vijayalakshmi

இதையடுத்து சைதாப்பேட்டை 18-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நாளை ஹரிநாடாரை திருவான்மியூர் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


newstm.in

Next Story
Share it