மீண்டும் நடிகை சினேகா சென அழகு.. ‘ஜிம்’க்கு போய் உடல் எடையை குறைத்தார் !!
மீண்டும் நடிகை சினேகா சென அழகு.. ‘ஜிம்’க்கு போய் உடல் எடையை குறைத்தார் !!

புதிய பட வாய்ப்புகள் வந்ததால் நடிகை சினேகா ‘ஜிம்’முக்கு போய் கடினமாக ஒர்க்அவுட் செய்து உடல் எடையை குறைத்தார்.
நடிகை சினேகா முதலில் மலையாளத்தில் , இங்கனே ஒரு நீல பாக்ஷி என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார். பின்பு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். பின்னர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தினார். என்னவளே படத்தில் நடித்து புகழ் பெற தொடங்கினார்.
மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார். இப்படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்து புகழ் பெற்றார். இதற்கு தமிழ்நாடு சிறந்த நடிகை விருது கிடைத்தது . தொடர்ந்து புன்னகை தேசம் , உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்களில் விருது பெற்றார். பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் என்று சுமார் எழுபது படங்களில் நடித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு சினேகா முதல் முறையாக பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்தார். இதன் மூலம் காதலர்களாக மாறிய இருவரும் கடந்த 2012ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு, ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது சினேகா Weight போட்டதால், தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடிக்க விரும்பியதால், உடல் பருமனை குறைக்க முன்வந்தார். இதற்காக, ‘ஜிம்’முக்கு போய் கடுமையான பயிற்சிகள் செய்தார். இதன் மூலம் அவருடைய உடல் எடை 7 கிலோ குறைந்தது. மேலும் எடையை குறைப்பதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
உடல் எடை குறைந்த நிலையில் அண்மையில் நடிகை சினேகா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகின்றன.

Newstm.in

