Theme Check

21 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் உடன் ஜோடி சேரும் நடிகை!!

21 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் உடன் ஜோடி சேரும் நடிகை!!

21 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் உடன் ஜோடி சேரும் நடிகை!!
X

ஹெச்.வினோத் அடுத்து அஜித்தை வைத்து இயக்க இருக்கும் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தபு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத், அஜித் கூட்டணியில் முதலாவதாக வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து இரண்டாவது முறையாக 'வலிமை' படத்தில் இணைந்தனர்.

இந்த இரண்டு படங்களையும் போனி கபூர் தயாரித்துள்ளார். வலிமை வெளியீட்டுக்கு தயாராக இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித் தனது அடுத்த படத்திலும் எச். வினோத் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே கூறப்பட்டு வந்தது. இந்தப் படத்திற்காக செட் அமைக்கும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ajith tabu

தற்போது நடிகை தபு இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அஜித் தபு ஜோடி ஏற்கனவே 2000ஆம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி இணைய வாய்ப்பு அமைந்துள்ளது. தல 61 படத்திற்கு ஜிப்ரான் தான் இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it