நடிகை திரிஷா-விற்கு கொரோனா தொற்று உறுதி..!!

நடிகை திரிஷா-விற்கு கொரோனா தொற்று உறுதி..!!

நடிகை திரிஷா-விற்கு கொரோனா தொற்று உறுதி..!!
X

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த இவர் தற்போது சில காலமாக நல்ல கதைகொண்ட குறைவான படங்களில் மட்டும் நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர், தமிழில் கடைசியாக ‘பரமபதம் விளையாட்டு’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

1

இந்நிலையில் நடிகை த்ரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தும், புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தன. தடுப்பூசி எடுத்துக்கொண்டதன் விளைவாக எனக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அதற்காக நான் நன்றி கூறுகிறேன். விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தயவு செய்து அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். நான் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்யும் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி”என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags:
Next Story
Share it