திரையுலகில் புயலை ஏற்படுத்திய நடிகை.. சின்னத்திரையில் ரீ என்ட்ரி !!

திரையுலகில் புயலை ஏற்படுத்திய நடிகை.. சின்னத்திரையில் ரீ என்ட்ரி !!

திரையுலகில் புயலை ஏற்படுத்திய நடிகை.. சின்னத்திரையில் ரீ என்ட்ரி !!
X

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமானவர் நடிகை பூர்ணிதா. தமிழில் நடிகர் ஜெயம் ரவி அறிமுகமான “ஜெயம்” படத்தில் நடிகை சதாவிற்கு தங்கையாக கல்யாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த கதாபாத்திரம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அதிக பரிட்சயமானார். பின்னர் நடிகை பூர்ணிதா கல்யாணி என்றே அழைக்கபட்டார். ஜெயம் படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்திலும் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். இவர் அள்ளித்தந்த வானம், ரமணா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

actress kalyani

மேலும், திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த போதே சீரியலில் நடிக்கும் வாய்ப்பும் எட்டியது. ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன் போன்ற சீரியலைகளில் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாது தொகுப்பாளினியாகவும் கலக்கினார். குறிப்பாக ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பாவனாவுடன் இணைந்து, சிறப்பாக செயல்பட்டார் என புகழ் பெற்றார்.

actress kalyani

பின்னர் அங்கிருந்து விஜய் டிவியில் தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார். மேலும், இவர் சிறு வயதில் இருந்தே 300 விளம்பரங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ரோஹித் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். பெங்களூரில் செட்டில் ஆன இவருக்கு நவ்யா என்ற மகளும் இருக்கிறார்.

actress kalyani

இந்த நிலையில், சின்னத்திரையில் இருந்தும் விலகினார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறுகையில், அட்ஜெஸ்ட்மென்ட் செய்துகொள்ள கேட்டதால் தான் இந்த துறையில் இருந்தே விலகியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதாவது, எனக்கு சினிமா வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைத்து வந்தன. சிலர் என் வீட்டிற்கு கால் செய்து என் அம்மாவிடம் பெரிய நடிகர்களின் படத்தில் உங்கள் மகளுக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருகிறோம். ஆனால் கொஞ்சம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் நாங்கள் சொன்னபடி வாய்ப்பு கொடுப்போம் என்பார்கள், என்று கூறியிருந்தார்.

actress kalyani

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் திருமணத்திற்கு பின்னர் பல வாய்ப்புகள் வந்தும் அதனை நிராகரித்து வந்தார். மேலும் சோசியல் மீடியாவில் அவ்வப்போது கணவர் மற்றும் மகளுடன் எடுக்கும் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில், நடிகையும் தொகுப்பாளினியுமான கல்யாணி மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன்4 நிகழ்ச்சியில் KPY பிரபலம் அமுதவாணன் இணைந்த நடுவராக செயல்பட உள்ளார், என தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it