ஆரியன்கானுடன் சிக்கும் நடிகைகள்.. போதைப் பொருள் வழக்கு பிரபல நடிகையிடம் தீவிர விசாரணை !

ஆரியன்கானுடன் சிக்கும் நடிகைகள்.. போதைப் பொருள் வழக்கு பிரபல நடிகையிடம் தீவிர விசாரணை !

ஆரியன்கானுடன் சிக்கும் நடிகைகள்.. போதைப் பொருள் வழக்கு பிரபல நடிகையிடம் தீவிர விசாரணை !
X

சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் பாலிவுட்டில் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ananya pandy

இந்த வழக்கில் பிரபல நடிகை அனன்யா பாண்டேவின் பெயரும் அடிபட்டுள்ளது. இதனையடுத்து, சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கு தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடிகை அனன்யா பாண்டேவின் வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தியதுடன், அவரது லேப்டாப் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்றும் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. அதன்படி, நடிகை அனன்யா பாண்டே விசாரணைக்கு நேரில் ஆஜரானார். அவரிடம் சுமார் 4 மணி நேரம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

ananya pandy

ஆர்யன் கானுக்கு போதைப்பொருள் வாங்க உதவுவதை குறிக்கும் வகையிலான வாட்ஸ்அப் உரையாடல் தொடர்பாக அனன்யா பாண்டேவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது. ஆனால், போதைப் பொருள் பயன்பாடு, மற்றும் சப்ளை தொடர்பான குற்றச்சாட்டை அனன்யா பாண்டே மறுத்துள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it