Theme Check

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடு.. அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம்..!

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடு.. அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம்..!

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடு.. அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம்..!
X

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்திலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அனுமதி கோரி, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 28 பேருக்கு எஸ் வகை மரபணு மாற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில், 4 பேர் மட்டும் ஒமைக்ரான் பரவல் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள். 24 பேர் மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள்.

இதனால், இனிமேல் அனைத்து நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் கொரோன பரிசோதனை கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் தான் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

அனைத்து வெளிநாட்டுப் பயணிகள், வீட்டிலோ அல்லது மையங்களிலோ தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 8 வது நாளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

Next Story
Share it