அடினா இது அடி.. கம்மின்ஸ் சரவெடி.. கண்ணீர் விட்டு அழுத மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்..
அடினா இது அடி.. கம்மின்ஸ் சரவெடி.. கண்ணீர் விட்டு அழுத மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்..

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது.
மும்பை அணி தொடக்கத்தில் பெரும் தடுமாற்றத்தில் இருந்தது. 15 ஓவர்களில் கிட்டதட்ட 90 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். எனினும் அதன்பிறகு சூரியகுமார் யாதவ் அதிரடியால் ரன்சேர்ந்தது. அவர் அரைசதம் அடித்தார். கம்மின்ஸ் நான்கு ஓவர்களை வீசி 49 ரன்களை வாரி வழங்கினார்.

பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்கத்தில் அந்த அணி தடுமாறினாலும் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஸல் ஒர சிக்சர் மட்டுமே அடித்துவிட்டு ஆட்டமிழந்தார்.
பின்னர் வெங்கடேஷ் உடன் இணைந்து கம்மின்ஸ் தான் களத்துக்கு வந்தது முதல் சிக்சர், பவுண்டரிகளாக பறக்கவிட்டார். டேனியல் சாம்ஸ் வீசிய 16-வது ஓவரில் கம்மின்ஸ் தனியொருவராக 35 ரன்கள் குவித்து 14 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதே ஓவரில் கொல்கத்தா அணி 162 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காம்ல் இருந்தார். இந்த போட்டியில் அவர் 14 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் கேஎல் ராகுல் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதோடு ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். கம்மின்ஸ் மரண அடியை பார்த்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கண்ணீர் விட்டிருப்பர்.
newstm.in

