37 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாக்கியராஜின் ‘முந்தானை முடிச்சு’ !
37 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாக்கியராஜின் ‘முந்தானை முடிச்சு’ !

தமிழ் திரையுலகில் தன் வித்தியாசமான கதையமைப்பாலும், நகைச்சுவை கலந்த திரைக்கதையாலும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் இதயம் கவர்ந்தவர் இயக்குநர் கே.பாக்யராஜ். நடிகர் கே.பாக்கியராஜும் , நடிகை ஊர்வசியும் இணைந்து நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் வெளிவந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியையும், வசூல் சாதனையையும் நிகழ்த்தியது என்றால் மிகையில்லை.

’ 37 வருடங்களுக்கு பின், இந்த படம் மீண்டும் தயாரிக்கப்படுகிறது. நடிகர் பாக்யராஜ் நடித்த வேடத்தில் சசிகுமாரும், ஊர்வசி நடித்த வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்டஹி சதீஷ் தயாரிக்கிறார்.
‘சுந்தரபாண்டியன்’, ‘கொம்புவச்ச சிங்கம்டா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உருவாகும் படம். சசிகுமாரும், எஸ்.ஆர்.பிரபாகரனும் இணையும் 3வது படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. இந்தப் படத்துக்கு ‘முந்தானை முடிச்சு’ என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

