Theme Check

7 மாதங்களுக்கு பிறகு.. இந்தியாவில் 1.5 லட்சத்தை தாண்டியது தினசரி கொரோனா பாதிப்பு !

7 மாதங்களுக்கு பிறகு.. இந்தியாவில் 1.5 லட்சத்தை தாண்டியது தினசரி கொரோனா பாதிப்பு !

7 மாதங்களுக்கு பிறகு.. இந்தியாவில் 1.5 லட்சத்தை தாண்டியது தினசரி கொரோனா பாதிப்பு !
X

கொரோனா இரண்டாவது அலையின்போது ஒரே நாளில் ஒன்றரை லட்சத்தை தினசரி பாதிப்பு தாண்டிய நிலையில், பின்னர் குறைந்தது. ஆனால் தற்போது மீண்டும் 7 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

corona

அதன்படி, நாடு முழுவதும் புதிதாக 1,59,632 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,55,28,004 ஆக உயர்ந்தது. புதிதாக 327 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,83,790 ஆக உயர்ந்தது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 40,863 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,44,53,603 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 590611 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

vaccine

குணமடைந்தோர் விகிதம் 96.98% ஆக குறைந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.36% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.66% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 1,51,57,60,645 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 89,28,316 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it