Theme Check

பப்ஜி மதனை தொடர்ந்து டிடிஎஃப் வாசன்.. குவியும் புகார்கள்.. குறி வைக்கும் போலீசார்..!

பப்ஜி மதனை தொடர்ந்து டிடிஎஃப் வாசன்.. குவியும் புகார்கள்.. குறி வைக்கும் போலீசார்..!

பப்ஜி மதனை தொடர்ந்து டிடிஎஃப் வாசன்.. குவியும் புகார்கள்.. குறி வைக்கும் போலீசார்..!
X

டிடிஎஃப் வாசன் என்ற யூ-டியூபர், சூப்பர் பைக்குகளை பயன்படுத்தி பயணம் செய்து பல்வேறு வீடியோக்களை தனது யூ-டியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். இவரை, 28 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், யூ-டியூபர் டிடிஎஃப் வாசன் சமீபத்தில் சுமார் 247 கிலோமீட்டர் வேகத்தில் இருசக்கர வாகனத்தை இயக்கும் வீடியோவை தனது யூ-டியூப் சேனலில் வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவை, சென்னை காவல்துறையின் சமூக வலைதள பக்கம் மற்றும் தமிழக காவல்துறையின் சமூக வலைதள பக்கத்துடன் இணைத்து ஏராளமானோர் புகார் அளித்து வருகின்றனர்.

அவர்கள் அளித்துள்ள புகாரில், ‘இதுபோன்ற வீடியோ பதிவுகளை இளைஞர்கள் தவறான முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அவர்களும் அதிவேகமாக பைக் ஓட்டுவார்கள்.

எனவே, டிடிஎஃப் வாசன் மீதும், அவரை பின்பற்றி அதேபோன்று அதிவேகமாக பைக்குகளை இயக்கி வீடியோ பதிவிடும் மற்ற நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளனர்.

இதற்கு, சமூக வலைதளத்தின் மூலம் பதில் அளித்துள்ள சென்னை காவல்துறை, ‘இதுபோன்ற செயல்களை சென்னை மாநகரத்தில் அனுமதிக்க மாட்டோம்.

மாணவர்களும், இளைஞர்களும் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம். நீங்களும் உங்களுடைய பாதுகாப்பும் முக்கியம்.

இந்த சம்பவம் நிகழ்ந்த பகுதி சென்னை காவல்துறைக்கு உட்பட்டது அல்ல. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பகுதி காவல்துறையினரிடம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டு பண மோசடியில் ஈடுபட்ட பப்ஜி மதன் என்ற யூ-டியூபர் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில், டிடிஎஃப் வாசன் என்ற மற்றொரு யூ-டியூபர் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக மாறிவிடக்கூடாது என சமூக வலைதளம் மூலம் பலரும் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Next Story
Share it