Theme Check

மீண்டும் ஒரு உயிரை காவு வாங்கிய நீட் தேர்வு..!!

மீண்டும் ஒரு உயிரை காவு வாங்கிய நீட் தேர்வு..!!

மீண்டும் ஒரு உயிரை காவு வாங்கிய நீட் தேர்வு..!!
X

சென்னை சூளைமேடு சுப்பாராவ் நகரைச் சேர்ந்தவர் பிரதாப் (42). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் கரண், தனுஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவரது இளையமகன் தனுஷ் (18), கடந்த 2020-ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்து முடித்து பின்னர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றுள்ளார்.

பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த தனுஷ் 159 மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார். அவர் எடுத்த மதிப்பெண்ணிற்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க போதிய பணம் இல்லாத காரணத்தினால் மீண்டும் நீட் தேர்விற்காக தன்னை தயார் செய்து வந்தார்.

suicide

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயில வேண்டும் என்ற கனவோடு இரவு பகல் பாராமல் தனுஷ் பயிற்சி மேற்கொண்டுள்ளார். வீட்டின் ஏழ்மை காரணமாக தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும் சொந்த முயற்சியில் வீட்டில் இருந்து கொண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் காலை தந்தை, தாயும் வேலைக்கு சென்ற பின்னர் தனுஷ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு அவரது தாய் பணி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு தாழ்ப்பாள் போடாமல் சாத்தியபடி இருந்தது. பின்னர் அவர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது மகன் தனுஷ் வீட்டு மேற்கூடையில் பெல்ட்டால் தூக்கிட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

dead-body

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தனுஷை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தனுஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை கேஎம்சி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியதையடுத்து அவர்கள் கேஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோத்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக தந்தை பிரதாப் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூளைமேடு போலீசார் தனுஷ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

தன்னால் படிக்க முடியாத காரணத்தினாலும், தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் தெரிவித்து வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story
Share it