Theme Check

அக்னி நட்சத்திரம் முடிந்தும் அனலை கக்கும் வெயில்! 10 இடங்களில் சதம்!!

அக்னி நட்சத்திரம் முடிந்தும் அனலை கக்கும் வெயில்! 10 இடங்களில் சதம்!!

அக்னி நட்சத்திரம் முடிந்தும் அனலை கக்கும் வெயில்! 10 இடங்களில் சதம்!!
X

தமிழகம் முழுவதும் இன்று 10 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் பதிவாகியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், தென் மேற்கு பருவமழை துவங்கினாலும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில், கோடை வெயிலின் தாக்கம் தீவிரமாக உள்ளது. சென்னையில் தொடர்ந்து 13ஆவது நாளாக வெயில் சதம் அடித்துள்ளது.

இன்று சென்னை மீனம்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. அந்த வகையில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக வேலூர் மற்றும் கரூர் பரமத்தியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

heat1

அதனைத் தொடர்ந்து திருத்தணி 105 டிகிரி ஃபாரன்ஹீட், திருச்சி 104 டிகிரி ஃபாரன்ஹீட், தஞ்சை ,மதுரை விமான நிலையம், மீனம்பாக்கம் 102 ஆகிய இடங்களில் டிகிரி ஃபாரன்ஹீட், நாமக்கல், மதுரை, நாகை ஆகிய இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக வெயில், மழை வெவ்வேறு காலநிலைகளில் அதிகம் பதிவாகி வருகிறது. அந்த வகையில் மே மாதத்தை கடந்து வெயில் வாட்டி வருவதால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it