Theme Check

வேளாண் பட்ஜெட்: வேளாண்மை துறைக்கு மொத்தமாக ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு !

வேளாண் பட்ஜெட்: வேளாண்மை துறைக்கு மொத்தமாக ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு !

வேளாண் பட்ஜெட்: வேளாண்மை துறைக்கு மொத்தமாக ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு !
X

விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் அத்துறைக்கென தனியாக பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் என தேர்தலுக்கு முன்பாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. பின்னர் நடந்த தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து, திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் கடந்த ஆண்டு மாநிலத்தின் முதல் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

இந்நிலையில் இந்தாண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இப்பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகாவிற்கு பிறகு வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் 3ஆவது மாநிலம் தமிழகம் ஆகும்.

கடந்த ஆண்டின் 86 வகையான அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். வேளாண்மை துறைக்கு மொத்தமாக ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

farmer

தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்ட அவர்,

  • பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு பட்ஜெட்டில் மாநில அரசின் பங்காக ரூ.2,339 கோடி ஒதுக்கீடு
  • பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு பட்ஜெட்டில் மாநில அரசின் பங்காக ரூ.2,339 கோடி ஒதுக்கீடு
  • 9.26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடாக ரூ.2,055 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • 7,500 ஏக்கரில் இயற்கை வேளாண் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.
  • மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் ரூ.71 கோடியில் புதிதாக செயல்படுத்தப்படும்
  • நெல் ஜெயராமன் பெயரில் 200 ஏக்கரில் பாரம்பரிய நெல் விதைகளை உற்பத்தி செய்து 20 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்
  • வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ.1லட்சம் வழங்கப்படும்

newstm.in

Next Story
Share it