Theme Check

வரும் 9ம் தேதி தமிழகம் முழுவதும்.. அதிமுக அதிரடி அறிவிப்பு..!

வரும் 9ம் தேதி தமிழகம் முழுவதும்.. அதிமுக அதிரடி அறிவிப்பு..!

வரும் 9ம் தேதி தமிழகம் முழுவதும்.. அதிமுக அதிரடி அறிவிப்பு..!
X

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திமுக அரசைக் கண்டித்து வரும் 9ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

அதில், பெட்ரோல், டீசல் மீதான தமிழக அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும். மழை, வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்க வேண்டும். வெள்ளப் பாதிப்புகளுக்கு பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு அளிக்க வேண்டும்.

பொங்கல் விழாவைக் கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அளிக்க வேண்டும். அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதைக் கண்டித்தும், அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்திருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை எதிர்த்தும், தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it