Theme Check

அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடை..? முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி வழக்கு

அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடை..? முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி வழக்கு

அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடை..? முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி வழக்கு
X

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தநிலையில் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் எதிரொலித்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் ‘ஒற்றை தலைமை’ விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதிமுக தொடர்ந்து இரட்டை தலைமையின் கீழ் தான் இயங்கும் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக கட்சியின் சட்டத்திட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திட்டத்தின்படி, ‘அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு உள்கட்சி தேர்தல் நடத்தப்படும். கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்கின் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்’ என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் 7-ந்தேதி தேதி நடைபெறுகிறது. இதற்கான மனு தாக்கல் இன்று தொடங்கியது மதியம் 12 மணி வரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “ஒற்றை தலைமை வேண்டும் என்ற கட்சி நிறுவனர், உறுப்பினர்களின் நோக்கத்திற்கு எதிராக விதி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் செயல்படுகின்றனர். தேர்தலுக்கு 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

Next Story
Share it