Theme Check

திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளரால் பரபரப்பு !

திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளரால் பரபரப்பு !

திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளரால் பரபரப்பு !
X

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகி வேட்பு மனு தாக்கல் முடிந்துள்ளது. இதனால் வேட்பாளர்கள் யார் யார் என உறுதியாகிவிட்டதால், தீவிர பிரச்சாரத்தைத தொடங்கியுள்ளனர். மக்களை வீடு தேடிச்சென்று வாக்குவேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனால் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியினர் பிரச்சாரம் செய்துவந்தார். ஆனால் அக்கட்சியினரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

dmk office

ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 12ஆவது வார்டு, செட்டி தெரு பகுதியில் போட்டியிட முன்னாள் கவுன்சிலரும், அதிமுக பொருளாளருமான அண்ணாதுரை அறிவிக்கப்பட்டார். வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளில் அண்ணாதுரையை தவிர மற்ற அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

இதனால், உடனடியாக 12ஆவது வார்டிற்கு மாற்று வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் இரவு எல்லாபுரம் ஒன்றிய செயலர் முன்னிலையில், அதிமுகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அண்ணாதுரை திமுகவில் தன்னை இணைத்து கொண்டார். இந்த சம்பவம் உள்ளூர் பகுதி அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நல்லவேளை அவர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.

newstm.in

Next Story
Share it