Theme Check

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய அதிமுக..!

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய அதிமுக..!

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய அதிமுக..!
X

தமிழகத்தில் கொரோனாவில் இரண்டாவது அலை காரணமாக தொற்று பரவல் அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் அரசு சந்தித்து வருகிறது.

கொரோனா நோய்த் தொற்றை எதிர்கொள்வதற்காக தாராளமாக நிதி அளிக்கலாம் என்று கொடையாளா்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பலரும் தங்களால் இயன்ற கொரோனா நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடியும், கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமும் நிதியுதவியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உரிய நிவாரணங்களை வழங்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும்.

மேலும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் கொரோனா நிவாரண பணிகளுக்கென முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it