Theme Check

தேர்தல் நடைபெறும் போதே பணப்பட்டுவாடா… கையும் களவுமாக பிடிபட்ட அதிமுக நிர்வாகி!!

தேர்தல் நடைபெறும் போதே பணப்பட்டுவாடா… கையும் களவுமாக பிடிபட்ட அதிமுக நிர்வாகி!!

தேர்தல் நடைபெறும் போதே பணப்பட்டுவாடா… கையும் களவுமாக பிடிபட்ட அதிமுக நிர்வாகி!!
X

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் போது சென்னை மயிலாப்பூர் கேசவபுரம் தெற்கு கோவில் தெருவில் வீடு வீடாக டோக்கன் கொடுக்கப்படுவதாக 9ஆவது மண்டல பறக்கும்படை தேர்தல் அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி மற்றும் மயிலாப்பூர் போலீஸார் மயிலாப்பூர் கேசவபுரம் தெற்கு கோவில் தெருவிற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அதிமுகவைச் சேர்ந்த 124ஆவது வட்ட செயலாளர் தங்கதுரை என்பவர் வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் போது அவரை மடக்கி பிடித்தனர்.

admk

அவரிடம் தேர்தலுக்கு வாக்களிக்கும் நபர்களுக்கு QR குறியீடு கொண்ட அதிமுக சின்னம், ஜெயலலிதா படம் அச்சடிக்கப்பட்ட கார்டுகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர் வைத்திருந்த நோட்டு ஒன்றில் பல பெயர்கள் கையால் எழுதப்பட்ட துண்டுச்சீட்டு வைத்திருந்ததையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தங்கதுரையை மயிலாப்பூர் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it