“இபிஎஸ் - ஓபிஎஸ்-சை கட்சியை விட்டு நீக்குவோம்…” : அதிமுக நிர்வாகிகள் தீர்மானம்..!

“இபிஎஸ் - ஓபிஎஸ்-சை கட்சியை விட்டு நீக்குவோம்…” : அதிமுக நிர்வாகிகள் தீர்மானம்..!

“இபிஎஸ் - ஓபிஎஸ்-சை கட்சியை விட்டு நீக்குவோம்…” : அதிமுக நிர்வாகிகள் தீர்மானம்..!
X

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சில அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

அதிமுக வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆறுமுகப்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கௌசல்யா, அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ரூபம்.கே.வேலவன் மற்றும் அமமுக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், ‘சசிகலா மீண்டும் அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்க வேண்டும். சசிகலாவிடம் பேசியவர்களை நீக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இதே போன்று நிர்வாகிகளை நீக்கினால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிமுகவில் இருந்து நீக்குவோம்’ என்று 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்களை வலியுறுத்தி அதிமுக தொண்டர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற அதே நாளில் கோவில்பட்டியில் சசிகலாவிற்கு ஆதரவாக கூட்டம் நடந்தப்பட்டு, அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும், சசிகலாவிற்கு ஆதரவாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:
Next Story
Share it