சாக்கடைக்குள் விழுந்த அதிமுக நிர்வாகிகள் - அமைச்சர் நிகழ்ச்சியில் கூட பாதுகாப்பில்லை
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்ட நிகழ்ச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரவுண்டானா இடிந்து விழுந்ததால் அதிமுக நிர்வாகிகள் பாதாள சாக்கடைக்குள் விழுந்தனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை முழுவதும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. செல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்களின் சிலைகள் வைக்க உள்ளனர்.

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்ட நிகழ்ச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரவுண்டானா இடிந்து விழுந்ததால் அதிமுக நிர்வாகிகள் பாதாள சாக்கடைக்குள் விழுந்தனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை முழுவதும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் செல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்களின் சிலைகள் வைக்க உள்ளனர். இதன் தொடக்க விழா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. விழாவை தொடக்கி வைத்து அமைச்சர் பேசிக் கொண்டிருந்த போது அவர் நின்று கொண்டிருந்த ரவுண்டானா திடீரென இடிந்து விழுந்தது .
newstm.in
Tags:
Next Story


