அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு கூட்டிச் சென்று விசாரணை..!!
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு கூட்டிச் சென்று விசாரணை..!!

சென்னை பெசன்ட்நகரைச் சேர்ந்த நடிகை கொடுத்த புகாரின்பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை அடையாறு அனைத்து மகளிர் போலீசார் பெங்களூருவில் கைது செய்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சைதாப்பேட்டை கிளைச் சிறையில் மணிகண்டனுக்கு சோபா, ஏசி, செல்போன் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் சிறைத்துறையின் லஞ்ச ஒழிப்புப்பிரிவினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டை சிறையில் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், அங்கிருந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவத்துக்கு பின்னர், மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், சிறையில் மணிகண்டன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக வெளியான தகவலை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்தனர். கொரோனா காலத்தில் கடைப்பிடிக்கப்படும் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றியே மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில்,மணிகண்டனை 2 நாள் போலீஸ் காவலில் எடித்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், மணிகண்டனை ஜூலை 3, 4 ஆகிய தேதிகளில் மதுரைக்கு கூட்டிச் சென்று விசாரணை நடத்தவும் ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
மணிகண்டனின் செல்போனை கண்டுபிடிக்கவும் அடையாறு போலீசுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது. மணிகண்டனை வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:
Next Story

