Theme Check

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்.. போலீசார் குவிப்பு !

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்.. போலீசார் குவிப்பு !

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்.. போலீசார் குவிப்பு !
X

பண மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று (ஜன.5) கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தப்போது வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்து. புகார் தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க அவர் முன்ஜாமின் மனுக்களை தாக்கல் செய்தார். ஆனால் அவரது முன்ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது.

rajenthira balaji

இதையடுத்து அன்று முதலே ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகினார். அவரை 8 தப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இதனிடையே, ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், தனிப்படை போலீசார் ராஜேந்திர பாலாஜியை நேற்று கர்நாடகாவில் கைது செய்தனர். ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்த பாஜக நிர்வாகி உள்பட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி தமிழகம் அழைத்து வரப்பட்டு விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு காலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதனையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

rajenthira balaji

இதனிடையே, ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பும், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் முன்பும், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உட்பட 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் குவிந்தனர். இவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

newstm.in

Next Story
Share it