திமுகவில் ஐக்கியமாகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர்..!!

திமுகவில் ஐக்கியமாகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர்..!!

திமுகவில் ஐக்கியமாகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர்..!!
X

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவை அடுத்து திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபகாலமாக மாற்றுக் கட்சியினர் திமுகவில் ஐக்கியமாகி வரும் நிகழ்வு அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், நேற்று முன்தினம் (8ம் தேதி) மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய டாக்டர் மகேந்திரன், பத்மபிரியா உள்ளிட்டோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 300 பேருடன் நாளை காலை 10.30 மணிக்கு அவர் திமுகவில் இணைய உள்ளார் எனக் கூறப்படுகிறது.

Tags:
Next Story
Share it