Theme Check

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளுக்கு முன்பு போராட்டம்..! - அதிமுக கூட்டத்தில் தீர்மானம்..!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளுக்கு முன்பு போராட்டம்..! - அதிமுக கூட்டத்தில் தீர்மானம்..!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளுக்கு முன்பு போராட்டம்..! - அதிமுக கூட்டத்தில் தீர்மானம்..!
X

சசிகலாவிற்கு எதிராக பேசி வரும் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளுக்கு முன்பு போராட்டம் நடத்துவது என அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பது, அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப்போவதாக அறிவித்த சசிசகலா, தற்போது தினம்தோறும் அதிமுக தொண்டர்களிடம பேசி வருகிறார். தொண்டர்களிடம் அவர் பேசும் தொலைபேசி உரையாடல்கள் நாள்தோறும் வெளியாகி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சசிகலாவிடம் பேசுபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வந்தாலும்கூட, அதிமுகவினர் அதனைக் கண்டுகொள்வதாக இல்லை. அதே நேரத்தில், பல இடங்களிலும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அதிமுக தலைமைக்கு சசிகலா புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், அதிமுகவின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ரூபம்.கே.வேலவன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா மீண்டும் வர வேண்டும். அதிமுக தொண்டர்களை சசிகலா சந்திக்க இருப்பது வரவேற்கக் கூடியது. சசிகலாவுடன் பேசியவர்கள் நீக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

சசிகலாவிற்கு எதிராக பேசி வரும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி இல்லங்கள் முன்பு போராட்டம் நடத்துவது என்பது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Tags:
Next Story
Share it