Theme Check

அதிமுக பொதுக்குழு.. பொதுமக்கள் அவதி..!

அதிமுக பொதுக்குழு.. பொதுமக்கள் அவதி..!

அதிமுக பொதுக்குழு.. பொதுமக்கள் அவதி..!
X

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள மண்டபத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்களில் மூலம் வானகரத்தில் குவிந்து வருகின்றனர்.

இதனால், மதுரவாயல் - வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல் வரை போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் முயற்சியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரத்திற்கு புறப்படுவதற்கு முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்கள் வீட்டில் தனித்தனியாக கோ பூஜை, சிறப்பு யாகம் நடத்தினர். அதன் பின்னர், பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரத்திற்கு ஓபிஎஸ், இபிஎஸ் புறப்பட்டுள்ளனர்.

Next Story
Share it