Theme Check

எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் குண்டுக்கட்டாக கைது.. போராட்டத்தில் பரபரப்பு !!

எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் குண்டுக்கட்டாக கைது.. போராட்டத்தில் பரபரப்பு !!

எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் குண்டுக்கட்டாக கைது.. போராட்டத்தில் பரபரப்பு !!
X

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்தவும், பாதுகாப்பிற்கு துணை ராணுவத்தை வரவழைக்க கோரியும், அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் வெளியூர் திமுகவினரை வெளியேற்றக் கோரியும், அதிகாரிகள் திமுகவிற்கு சாதகமாக செயல்படுவதாகவும் கூறி முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் அதிமுகவினர் இதில் உடன்படவில்லை.

sp velumani

இதனால் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நீடித்தது. போராட்டத்தை கைவிட மறுத்ததையடுத்து போலீசார் வேலுமணி உள்பட அதிமுக எம்.எல்.ஏக்களை கைது செய்தனர். அப்போது 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நிகழ்விடத்தில் இருந்ததால் போலீசாருக்கும் - அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தரையில் படுத்து கொண்டு தர்ணாவில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச்சென்றனர்.

கோவைக்கு ஏன் இந்த பரபரப்பு என்ற தகவல் குறித்து விசாரித்தப்போது, கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில் அனைத்தையும் அதிமுக கூட்டணியே கைப்பற்றியது. 9 இடங்களில் அதிமுக, ஒரு இடத்தில் கூட்டணி கட்சி வெற்றிபெற்றது. திமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

sp velumani

திமுக ஆட்சி அமைந்து குறைந்த நாட்களில் மாநகராட்சி தேர்தல் வருவதால் ஆளும்கட்சிக்கே மக்கள் வாக்குகளை செலுத்துவர் என்பது தமிழக வரலாறு. ஆனால், பத்து இடங்களையும் வென்றுவிட்டு மாநகராட்சி மேயர் பதவியை விட்டுக்கொடுத்தால் அது அதிமுகவுக்கு கௌரவ பிரச்சனை. அதுவே மேயர் பதவியை பிடிக்கவில்லையெனில் ஆளும்கட்சிக்கு பிரச்சனை. எனவே அப்பதவியை பிடிக்க அதிமுக கடும் போட்டிபோட்டு வருகிறது.

கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் தொடக்கம் முதலே பரபரப்பாக காணப்பட்டது. மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், ஓர் இடத்தை தவிர அனைத்து இடங்களிலும் அதிமுக நேரடியாக களம் காண்கிறது. திமுக 76 இடங்களில் நேரடியாக களம் காண்கிறது. எஞ்சியுள்ள 24 இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இதில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று மேயர் பதவியை கைப்பற்ற வேண்டுமென அதிமுக, திமுக என இருகட்சியினருமே தீவிரம் காட்டி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it