Theme Check

வரும் 11-ம் தேதி 11 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு..!!

வரும் 11-ம் தேதி 11 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு..!!

வரும் 11-ம் தேதி 11 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு..!!
X

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

திமுக அரசை கண்டித்து இன்று (டிச. 9) தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவிப்பு வெளியிட்ட நிலையில், வரும் 11-ம் தேதி காலை 11 மணியளவில் அனைத்து மாவட்ட தலைநகர்களில் நடைபெறும் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான தமிழ்நாடு அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை, வெள்ளம் பாதித்த மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும், வெள்ள பாதிப்புகளுக்கு பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு அளிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it