தொடங்கியது அதிமுக மாசெ-க்கள் கூட்டம்: முக்கியமான முடிவுகள் வெளியாகலாம்..!

தொடங்கியது அதிமுக மாசெ-க்கள் கூட்டம்: முக்கியமான முடிவுகள் வெளியாகலாம்..!

தொடங்கியது அதிமுக மாசெ-க்கள் கூட்டம்: முக்கியமான முடிவுகள் வெளியாகலாம்..!
X

சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து அக்கட்சி ஆட்சியை இழந்தது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.


இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் தோல்வி, சசிகலா வெளியிட்டு வரும் ஆடியோ விவகாரம் மற்றும் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கியத் தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.


முன்னதாக, கட்சி அலுவலகத்திற்கு வெளியே தொண்டர்கள் “ஒற்றைத் தலைமை ஓபிஎஸ்” என முழக்கமிட்டதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Tags:
Next Story
Share it