பேரவையில் அதிமுக எம்எல்ஏ பேச்சு.. திமுக எம்எல்ஏக்கள் ஆதரவு..!
பேரவையில் அதிமுக எம்எல்ஏ பேச்சு.. திமுக எம்எல்ஏக்கள் ஆதரவு..!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 18-ம் தேதி 2022 - 2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 19-ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
இதையடுத்து, துறைகள் வாரியாக மானியக் கோரிக்கைகளை, விவாதம் நடத்தி நிறைவேற்றுவதற்காக கடந்த 6-ம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
அந்த வகையில் இன்று (11-ம் தேதி), உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இதில், அதிமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன், கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் என்ன மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்பது குறித்து பேசினார்.
தொடர்ந்து, “தமிழகத்தை திராவிட இயக்கங்கள் தான் ஆளும்; வேறு எவராலும் தமிழகத்தை ஆள முடியாது” என்றார். அப்போது திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.

