டெல்லியில் பிரமாண்டமாக தயாராகி வரும் அதிமுக அலுவலகம் !
டெல்லியில் பிரமாண்டமாக தயாராகி வரும் அதிமுக அலுவலகம் !

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது.
தி.மு.க.விலிருந்து விலகிய பின்னர் எம். ஜி. இராமச்சந்திரன் அதிமுகவை தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பின்னர் அ.தி.மு.க., ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு ஜெ. ஜெயலலிதா முதல்வரானார்.
இந்நிலையில், இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்கும், அதிமுகவுக்கு தலைநகர் டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு, மத்திய அரசு இடம் வழங்கி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கு, இடம் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், மிகப் பிரமாண்ட அளவில் கட்டடத்தை அ.தி.மு.க., கட்டி முடித்துள்ளது.

இதன் முழு வேலைகளையும் தம்பிதுரை முன்னின்று பார்த்தார். சமீபத்தில், டெல்லி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த அலுவலகத்தை பார்வையிட்டுள்ளார். டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்தை விரைவில் திறக்க வேண்டும் என அதிமுக தலைமை விரும்புகிறதாம்.
இதனால், மிகப் பிரமாண்ட அளவில் கட்டடப்பட்ட அலுவலகத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

