கோவையில் அதிமுக நடத்தியது நாடகம்.. வரிசையில் நின்று வாக்களித்த பின் முதல்வர் பேட்டி
கோவையில் அதிமுக நடத்தியது நாடகம்.. வரிசையில் நின்று வாக்களித்த பின் முதல்வர் பேட்டி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வரிசையில் நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவி துர்காவுடன் வரிசையில் நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.

சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாள்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்காளர்கள் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

மேலும், கோவையில் தோல்விக்கான காரணத்தை மூடி மறைக்க அதிமுக நடத்திய நாடகம் என விமர்சித்தார். துணை ராணுவம் வரும் அளவுக்கு கோவையில் எவ்வித செயலும் நடக்கவில்லை என்றும் கூறினார். நேற்று முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட பலரும், திமுக மீது குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
newstm.in

