துபாயில் இருந்து விமான சேவை அதிகரிப்பு!!
துபாயில் இருந்து விமான சேவை அதிகரிப்பு!!

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு இயக்கப்படும் விமான சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2020ஆம் ஆண்டு அனைத்து விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டன. 8 மாதங்கள் நீடித்த பொதுமுடக்கத்தைத் தொடர்ந்தது, பின்னர் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்தது.
கொரோனா இரண்டாம் அலை, மூன்றாம் அலை, ஒமைக்ரான் பரவல் என அதிகரித்து கொண்டே சென்றது. தற்போது படிப்படியாக குறையத் துவங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை முதல் சர்வதேச விமான போக்குரவத்தை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு இயக்கப்படும் விமான சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. தற்போது அமீரகம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், விமான சேவை முன்பு இருந்தது போல் இயல்பான நிலையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை நகரத்துக்கு மட்டும் வாரத்துக்கு 21 விமானங்கள் இயக்கப்படும். இதன் மூலம் சென்னை நகரத்துக்கு எமிரேட்ஸ் விமானம் தினமும் 3 விமானங்களை மீண்டும் வழக்கம் போல் இயக்கும். பயணிகள் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணம் செய்யும் வகையில் முன்பதிவு செய்யும் முறையிலும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

முதல் மற்றும் வர்த்தக வகுப்பில் பயணம் செய்யும் பயணிகள் சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் போது விமான நிலையத்தில் இருந்து தங்களின் இருப்பிடங்களுக்கு செல்ல சொகுசு கார் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
newstm.in

