Theme Check

அனைத்து மாவட்டங்களிலும் விமான நிலையம்.. முதல்வர் திட்டம்..!

அனைத்து மாவட்டங்களிலும் விமான நிலையம்.. முதல்வர் திட்டம்..!

அனைத்து மாவட்டங்களிலும் விமான நிலையம்.. முதல்வர் திட்டம்..!
X

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் விமானம், துறைமுகம் மற்றும் மீன்பிடி துறைமுகம் ஆகிய துறைகளின் உயர்மட்ட அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு அமைக்கப்படும் விமான நிலையங்களில் உள்நாட்டு விமானங்கள், வெளிநாட்டு விமானங்கள், போயிங் ரக விமானங்கள் என பல்வேறு விமானங்களையும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.
CM Jagan raises pitch for 'one district-one airport' concept
ஆந்திராவில் தற்போது விசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி, ராஜமகேந்திரவரம், கர்னூல் மற்றும் கடப்பா ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் உள்ளன.

இந்நிலையில், அரசின் திட்டப்படி முதற்கட்டமாக ராமையன் பட்டினம், மச்சிலிபட்டினம், பாவனப்பாடு உள்ளிட்ட 7 இடங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, 9 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் ஆந்திர மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it