Theme Check

அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையம்! ரூ.101 கோடி ஒதுக்கீடு!

அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையம்! ரூ.101 கோடி ஒதுக்கீடு!

அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையம்! ரூ.101 கோடி ஒதுக்கீடு!
X

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நெடுங்கால போராட்டத்திற்கும் சர்ச்சைகளுக்கும் பிறகு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. பிரம்மாண்டமான முறையில் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணி முடிந்த பின்னர் அங்கு அதிகளவில் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அங்கு புதிதாக விமான நிலையம் கட்ட அம்மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி தற்போது விமான நிலையம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதை பின்னர் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேச சட்டசபையில் 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா நேற்று தாக்கல் செய்தார்.

அதில், அயோத்தியில் கட்டப்பட்டுவரும் விமான நிலையத்துக்கு ரூ.101 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும், புதிய விமான நிலையத்திற்ககு மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம் விமான நிலையம் என்று பெயர் சூட்டப்படும் என்றும் பட்ஜெட்டில் அமைச்சர் தெரிவித்தார்.

newstm.in


Tags:
Next Story
Share it