Theme Check

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஏர்டெல்..!

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஏர்டெல்..!

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஏர்டெல்..!
X

ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தப்போவதாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கோபால் விட்டல், தெரிவித்துள்ளார்.

விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. இதனால், விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். விரைவில் விலை ஏற்றத்துக்கான அறிவிப்பு வெளியிடுகிறோம். ப்ரீப்பெய்டு திட்டங்களின் விலை முதலில் உயர்த்தப்பட இருக்கிறது. இதனால் இந்த ஆண்டில் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

மேலும், ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணங்கள் இன்னும் குறைவாகவே உள்ளது. ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து சராசரியாக ரூ.200 வரை வசூலிக்க வேண்டும். இந்த கட்டண உயர்வை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.அதேநேரத்தில் சாமானியர்களை பெரிய அளவில் பாதிக்காத வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படும் என கோபால் விட்டல் கூறியுள்ளார்.

ஏர்டெல் நிறுவனத்தைப் போலவே மற்ற நிறுவனங்களும் விலை உயர்வு குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story
Share it