ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி!!
ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி!!

ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக இருந்தது. நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டிலும் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பின் தாக்கம் தீவிரமாக இருந்தது.
அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் திரிஷா, சத்யராஜ், மீனா, பிரபல தெலுகு நடிகர் மகேஷ் பாபு, மலையாள பட இயக்குநர் பிரயதர்ஷன் உள்ளிட்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
newstm.in

