உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்.. அடுத்தடுத்து வெளியாகும் வலிமை அப்டேட் !!
உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்.. அடுத்தடுத்து வெளியாகும் வலிமை அப்டேட் !!

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை. சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என வித்தியாசமான கதைக்களத்தில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் ஹெச்.வினோத். அடுத்து அஜித்திடம் கதை சொல்லி, அவரது சம்மதத்தையும் பெற்றார். அந்த நேரத்தில் அவர் போனி கபூருக்கு படம் பண்ணித்தர வேண்டியிருந்ததால், இந்தி பிங்கின் தமிழ் ரீமேக்கில் நடிக்க அஜித் ஒப்புக் கொண்டார்.

இயக்குநருக்கு ஏன் அலைய வேண்டும் என்று பிங்க் தமிழ் ரீமேக்கை இயக்கும் பொறுப்பை வினோத்திடம் அளித்தார். நேர்கொண்ட பார்வையாக அப்படம் வெளியானது. இதையடுத்து மீண்டும் போனி கபூர், அஜித், ஹெச்.வினோத் கூட்டணியில் வலிமை படத்தின் வேலைகளை தொடங்கப்பட்டது. தற்போது வலிமை படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் ஜூலை மாதம் வலிமையின் ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டு, வலிமை படக்குழுவினர் புரமோஷன் பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதன் மூலம் வலிமை அப்டேட் கேட்டு வலியுறுத்தி வரும் அஜித் ரசிகர்களுக்கு ஜூலை மாத இறுதியில் இருந்து அப்டேட் கிடைக்கும் எனத் தெரிகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
முன்னதாக வலிமை திரைப்பட அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் செய்த ரகளை கொஞ்சமில்லை. முதலமைச்சராக இருந்த இபிஎஸ், ஐபிஎல் விளையாட வந்த சிஎஸ்கே வீரர் மெயின் அலி என பலரிடம் வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் கிலி ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
newstm.in

