நண்பர்களுடன் சைக்கிளிங் சென்ற தல அஜித்..! புகைப்படங்கள் தொகுப்பு இதோ !!

நண்பர்களுடன் சைக்கிளிங் சென்ற தல அஜித்..! புகைப்படங்கள் தொகுப்பு இதோ !!

நண்பர்களுடன் சைக்கிளிங் சென்ற தல அஜித்..! புகைப்படங்கள் தொகுப்பு இதோ !!
X

அஜித் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரிடமும் ‘வலிமை அப்டேட்’ கேட்டு வரும்நிலையில், அஜித் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கிறார். இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக சென்னை எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்துக்கு அஜித் வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில் தற்போது அஜித் தனது நண்பர்களுடன் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ட்ரோன் தயாரித்தல், துப்பாக்கி சுடுதல், கார் ரேஸ், பைக் ரேஸ் உள்ளிட்டவற்றில் அதிக ஆர்வம் செலுத்தி வரும் அஜித் சைக்கிள் பயணத்திலும் தீவிரம் காட்டி வருகிறார்.

வலிமை அப்டேட் கேட்டு வரும் ரசிகர்களுக்கு அஜித்தின் இந்த புதிய புகைப்படங்கள் தீனியாக அமைந்துள்ளன.

Tags:
Next Story
Share it