யுவன் இசையில் மிரட்டும் அஜித்.. வலிமை அப்டேட் வந்தது... உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள் !!
யுவன் இசையில் மிரட்டும் அஜித்.. வலிமை அப்டேட் வந்தது... உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள் !!

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை தற்போது ஐதராபாத்தில் படமாக்கி வருகின்றனர். வலிமை படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள், ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் மோஷன் போஸ்டர் வீடியோ வைரலாகி வருகிறது.
newstm.in
Tags:
Next Story

