டாக்சியால் பட்டபாடு போதும்; ஆட்டோ தான் வேண்டும்: அஜித் திடீர் முடிவு..!

டாக்சியால் பட்டபாடு போதும்; ஆட்டோ தான் வேண்டும்: அஜித் திடீர் முடிவு..!

டாக்சியால் பட்டபாடு போதும்; ஆட்டோ தான் வேண்டும்: அஜித் திடீர் முடிவு..!
X

சென்னை ஆட்டோவில் நடிகர் அஜித் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அஜித்தை சாலையில் பார்த்த ரசிகர்கள் உற்சாக மிகுதியால் ‘தல’, ‘தல’ என்று கத்தி கூப்பாடு போட்டுவிட்டார்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக உள்ள அஜித், எப்போது எதை செய்வார் என்பது தெரியவே தெரியாது. அதேபோல அவரைப் பற்றிய எந்த செய்திகளும் வெளியில் வரவே வராது. ஆனால் சமீப காலமாக நடிகர் அஜித்தின் தனிப்பட்ட நகர்வுகள் பல ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

சென்னை ரைஃப்பிள் கிளப்புக்கு செல்வதாக வாடகை காரில் சென்ற அஜித், தவறான முகவரிக்கு சென்று சிக்கிக்கொண்டார். பிறகு போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதேபோல துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் இடம்பெற்ற குழுவினர் 4 தங்கம், 2 வெள்ளி என 6 பதக்கங்களை வென்றி அசத்தினர்.

இதுபோன்ற அஜித்தின் தனிப்பட்ட செயல்பாடுகள் குறித்த செய்திகள் ஊடகங்களில் வந்தவண்ணம் உள்ளன. அந்த வரிசையில் புதியதாக வெளியாகி இருக்கும் செய்தி, சென்னையின் பரபரப்பான சாலையில் ஆட்டோவில் சென்றுள்ளார் நடிகர் அஜித். அவரைப் பார்த்த ரசிகர்கள் தல தல என்று கூப்பிட்டு உற்சாகம் அடைந்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.



நடிகர் அஜித் எதற்காக ஆட்டோவில் சென்றார் என்பது தெரியாது. ஆனால் அவர் சென்ற வழியில் தான் சென்னை ரைஃப்பிள் கிளப் இருந்துள்ளது. முன்னதாக காரில் சென்று தவறான முகவரியில் அவர் சிக்கிக்கொண்டார். அந்த குழப்பத்தை போக்க அஜித் ஆட்டோவை விரும்பி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. தனிப்பட்ட வகையில் ஆட்டோ பயணத்தை விரும்பி அதில அவர் செல்ல விரும்பியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

சினிமாவில் நடிப்பதை தவிர்த்து தனக்கான வட்டத்தை மிகவும் பெரிதாக உருவாக்கி வைத்துள்ளார் நடிகர் அஜித். சைக்கிள் ஓட்டுவது, ரேஸ் பைக்கிங் ஓட்டுவது, ஆளில்லா விமானங்களை பறக்க விடுவது, அதை ஓட்டுவதற்கு மாணவர்களுக்காக பயிற்சி அளிப்பது, துப்பாக்கிச் சுடுவது என பல்வேறு விஷயங்களை அவர் செய்து வருகிறார். அந்த வரிசையில் ஆட்டோவை ஓட்டி பழக அவர் விரும்பி இருக்கலாம் என ரசிகர்கள் நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it