அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம்.. ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா..?
அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம்.. ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா..?

ஹெச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘வலிமை’. இதில், அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் ‘வலிமை’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ‘வலிமை’ திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து பொங்கல் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ‘வலிமை’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாவதால், ‘வலிமை’ படத்தை முன்கூட்டியே மார்ச் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

