தல தல தான்..!! வைரலாகும் அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்...

தல தல தான்..!! வைரலாகும் அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்...

தல தல தான்..!! வைரலாகும் அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்...
X

‘வலிமை’ படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்துள்ள ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Massive Changes in Valimai Trailer | Thala Ajith Kumar
நடிகர் அஜித்தின் 60-வது படம் ‘வலிமை’. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

‘வலிமை’ படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்துள்ள ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஜித்திடம் அனுமதி பெற்ற பின்னரே இதனை பகிர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வைரலாகும் நடிகர் அஜித்தின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் || Tamil cinema Actor Ajith  whatsapp status gone viral
அந்த ஸ்டேட்டஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரர் என்பது ஒரு தனி நபரின் பொருளாதார நிலையை குறிக்கிறதே தவிர அவரது குணத்தை அல்ல. சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். அதனால், ஒரு நபரின் பொருளாதார நிலையை வைத்து குணத்தை மதிப்பிடுவதை நாம் நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் இல்லாத அஜித் வாட்ஸ்அப் பயன்படுத்துவதே பலருக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. அத்துடன், ராஜ் ஐயப்பா தெரிவித்த இந்த விஷயத்தை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Tags:
Next Story
Share it