Theme Check

அலைபாயுதே ஸ்டைலின் கல்யாணம்... பின்னர் மனைவியின் கழுத்தறுக்க முயற்சி!!

அலைபாயுதே ஸ்டைலின் கல்யாணம்... பின்னர் மனைவியின் கழுத்தறுக்க முயற்சி!!

அலைபாயுதே ஸ்டைலின் கல்யாணம்... பின்னர் மனைவியின் கழுத்தறுக்க முயற்சி!!
X

வேலூர் மாவட்டம், குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்த யாஷினி (20) என்பவர் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் பிரிவில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இவரும் அதே பகுதியை சேர்ந்த கண் தொழில்நுட்பம் படித்து வரும் சதீஷ்குமார் (23) என்பவரும் காதலித்தனர். இந்நிலையில் இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் கோவில் ஒன்றில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் செய்து கொண்டது இருவீட்டாருக்கும் தெரியாத நிலையில் காதல் மனைவி யாஷினி மீது சதிஷூக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சதீஷ், யாஷினி இருவரும் திருவலம் மார்க்கெட் பகுதியில் சந்தித்து பேசிய போது வாய்தகராறு ஏற்பட்டது.

knife

அப்போது சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் யாஷினியின் கழுத்தை அறுத்தார். பொதுமக்கள் அவனை பிடித்து திருவலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த யாஷினி சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து திருவலம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காதல் மனைவியை கணவனே கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it