Theme Check

அட கொடுமையே.. மனைவியை 500 ரூபாய்க்கு விற்ற கணவர் !

அட கொடுமையே.. மனைவியை 500 ரூபாய்க்கு விற்ற கணவர் !

அட கொடுமையே.. மனைவியை 500 ரூபாய்க்கு விற்ற கணவர் !
X

தனது மனைவியை 500 ரூபாய்க்கு வேறொரு நபரிடம் கணவன் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கணவர் தனது மனைவியைன இளம்பெணை வேறொரு நபரிடம் 500 ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

girl

அந்நபரிடம் இருந்து தப்பிய அப்பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதில், செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி இரவு 9 மணியளவில் அங்குள்ள லக்கி ஹோட்டலுக்கு அப்பெண் தன் கணவர் தீரஜ் ஜாங்கிட் உடன் சென்றுள்ளார். அங்கு வந்த சோனு சர்மா என்பவரிடம் தன் கணவர் 500 ரூபாயை பெற்றுக் கொண்டு, அந்த நபருடன் பெண்ணை போக சொல்லி உள்ளார்.
ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான பகுதிக்கு கூட்டிச் சென்ற சோனு சர்மா அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் தெரிவித்து உள்ளார், என காவல்துறையினர் கூறுகின்றனர்.

girl

இந்த புகாரை அடுத்து பெண்ணின் கணவர் தீரஜ் ஜாங்கிட் மற்றும் சோனு சர்மாவை அடுத்த 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் சிகார் பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வெறும் 500 ரூபாய்க்காக மனைவியை கணவர் வேறொரு நபருக்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in


Tags:
Next Story
Share it