இந்த அதிகாரங்கள் எல்லாம் இனி இபிஎஸ் கையில்..!
இந்த அதிகாரங்கள் எல்லாம் இனி இபிஎஸ் கையில்..!

இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த பொதுக்குழுவில், பொதுச் செயலாளருக்கான அதிகாரம் சம்பந்தமான விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அதிமுகவின் நிர்வாக ரீதியான அனைத்து பொறுப்புகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்தை பொதுச் செயலாளர் கொண்டிருப்பார்.
தமிழகத்தில் உள்ள அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
துணைப் பொதுச் செயலாளர்களையும், பொருளாளரையும் பொதுச் செயலாளரே நியமிக்கும் அதிகாரம்.
அவைத்தலைவர், பொருளாளர், தலைமைக் கழக நிர்வாகிகள் கொண்ட செயற்குழுவை பொதுச் செயலாளரால் மட்டுமே அமைக்க முடியும்.
செயற்குழு - பொதுக்குழுவை கூட்டுவது, உட்கட்சி தேர்தலை நடத்துதல், வரவு - செலவு கணக்கை ஆராய்தல் உள்ளிட்ட பணிகளை பொதுச்செயலாளர் மேற்கொள்வார்.
சட்ட விதிகளை மீறும் நிர்வாகிகளை நீக்குவதற்கோ, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கோ பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம்.
பொதுக்குழு - செயற்குழு கூடாத நேரங்களில் நிகழ்ச்சிகள், கொள்கை, திட்டம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம்.
தேவையை பொறுத்து, வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கவோ, கொடுக்கவோ அதிகாரம்.
அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரும் படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம்.
அதிமுகவில் பெண் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் போன்றவை பொதுச் செயலாளர் வசம் இருக்கும்.

