இன்று முதல் ஊரடங்கில் இவற்றுக்கெல்லாம் தளர்வுகள் !! முழு விவரம் இதோ!!

இன்று முதல் ஊரடங்கில் இவற்றுக்கெல்லாம் தளர்வுகள் !! முழு விவரம் இதோ!!

இன்று முதல் ஊரடங்கில் இவற்றுக்கெல்லாம் தளர்வுகள் !! முழு விவரம் இதோ!!
X

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது

தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதி மற்றும் தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதன்படி,

  • காய்கறி, மளிகை கடைகளை போன்று பழ கடைகளும் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி.
  • அனைத்துத் தொழில் நிறுவனங்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
  • ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு உதவும் வகையில் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.சென்னையிலுள்ள தொழில் வழிகாட்டி மைய அலுவலகத்தில் இந்த சேவை மையம் இயங்கும். இதற்கான தொலைபேசி எண்கள் 96771-07722, 99943-39191, 78239-28262, 96291-22906, 99629- 93496, 99629-93497.
  • ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று அதே நிபந்தனைகளுடன், நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it